Thiruvalluvar theru kudiyiruppor pothu nalasangam - let us live hygienically, save us from the sewage wastes of Habittera appartment
Contact Complainant     1805 Views     Report Spam  
Complaint by: on November 1, 2012, 9:57 pm in Society and Culture

பெறுநர்

அன்பு உள்ளங்களே,

ஐயா,

வணக்கம். காஞ்சிபுரம் மாவட்டம், உறபக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம், திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் குறுக்கு தெரு, திருவள்ளுவர் முதல் தெரு, திருவள்ளுவர் இரண்டாவது தெரு, உள்ளிட்ட பகுதியில் சுமார் 250 க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள "ஹாபிட்டேர்ரா" அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள "கழிவுநீர்தேக்க தொட்டி" திருவள்ளுவர் குறுக்கு தெருவை ஒட்டி அமைந்துள்ளது. சரிவர பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீரும், மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, இப்பகுதியில் முடியாத நிலை ஏற்பட்டு, இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களும் இந்த வழியாக செல்கின்றனர். அவர்கள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கழிவுநீர்த் தொட்டியின் மூடிகளும் திறந்தே வைத்து விடுகின்றனர். கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வாயு வெளியேற வைக்கப்பட்டுள்ள குழாயும் வலை கட்டாமலே வைக்கப்பட்டுள்ளதால் கொசுவும் கழிவுநீர் தொட்டி வாயுவும், இப்பகுதி மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. பலமுறை இதனை சரி செய்ய சொல்லி நேரில் வலியுறுத்தியும் அவர்கள் சரி செய்யவில்லை.

எனவே ஐயா அவர்கள் ஊரப்பாக்கம், "ஹாபிட்டேர்ரா" அடுக்கு மாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியால் உருவாகும் சுகாதார சீர்கேட்டை களைந்து இப்பகுதி மக்களின் சுகாதார வாழ்வுக்கு வழிவகை செய்ய வேண்டுமென கோருகின்றோம்.

இங்கணம்,

திருவள்ளுவர் தெரு குடியிருப்போர் பொது நல சங்கம்
பதிவு என்: 591/2008.

Complainant's Goal: let us live hygienically, save us from the sewage wastes of Habittera appartment
Complaint Location: IndiaTamil NaduKanchipuram
Would you like to Comment on this Complaint?
By clicking "Post Comment" button, you agree to our Terms of Services and Privacy Policy
Recent Comments - 0 comments posted!